ராமஜெயம் கொலை வழக்கு: கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி திருவெறும்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் அசோக் என்பவரிடம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலையில் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் பல்வேறு கட்டமாக விசாரணை நடந்து வருகிறது. கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அசோக் என்பவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் அவரை நேற்று கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று அவரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: