சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரசில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க வேண்டும்: பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை

மன்னார்குடி: மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை விரைவு ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர். மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினம்தோறும் மன் னை விரைவு ரயில் (வஎண் 16180) இயக்கப் படுகிறது. இந்த ரயில் இரவு 10. 35 மணிக்கு மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு திருவாரூர், மயிலாடு துறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு காலை 6 மணிக்கு சென்றடைகிறது.

பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா நகர மக்கள் சென்னை செல்ல பெரிதும் இந்த ரயிலை நம்பித்தான் உள்ளனர். இந்த ரயில் இரவு நேரத்தில் இயக்கப்படுவது ஒரு கூடுதல் காரணமாகும். பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலில் முன் பதிவு இடம் கிடைப்பது அரிது. வாரம்தோறும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இந்த ரயிலுக்கு பிரீமியம் தட்கல் டிக்கெட்கள் கூட தட்கல் பயன் சீட்டு விற்பனை துவங்கி ஒருசில நிமிடங்களிலே தீர்ந்து விடுகிறது.

ரயிலுக்கு மாற்றாக பஸ் போக்குவரத்தை மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப் புற பகுதி மக்கள் தேர்வு செய்ய விரும்புவதில்லை. காரணம், மன்னார்குடி யில் இருந்து சென்னை செல்ல அரசு விரைவு பேருந்து கட்டணம் ரூ.330, அரசு குளிர்சாதன பேருந்து கட்டணம் ரூ.550, தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களில் கட்டணம் ரூ.400, குளிர்சாதன பேருந்துக்காக இருந்தால் ரூ.800, படுக்கை வசதி பேருந்தாக இருந்தால் ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே, பண்டிகை கால விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் தினசரி சென்னை செல்லும் பயணிகள் ரயிலில், முன்பதிவு அல்லாத பெட்டிகளில் முண்டியடித்து கொண்டு ஏறி படிக்கட்டு மற்றும் நடை பாதைகளில் நின்று கொண்டு பயணம் செய்து வருகின்றனர். குழநதை களை அழைத்து கொண்டு குடும்பத்தோடு செல்பவர்கள், முதியவர்கள், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தற்போது மன்னை விரைவு ரயில் 18 பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக 5 பெட்டிகள், 2 முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகளும், 2 மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளும், 1 முன்பதிவு அல்லாத பெட்டியும் இணைக்க பட வேண்டும். கூடுதல் பெட்டிகளின் தேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் உணர்ந்து உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை பொது மக்கள் மற்றும் வர்த்தகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்குமா?

வருமானம் அதிகரிக்கும்

தெற்கு ரயில்வேயில் மொத்தம் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. பாரத் அம் ரித் திட்டத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ள  மன்னார்குடி ரயில் நிலை யம் வருவாய் ஈட்டுவதில் தமிழ்நாட்டில் 55 வது இடத்தில உள்ளது குறிப் பிடத்தக்கது. இதன் காரணமாக மன்னை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி கள் இணைத் தால் நிர்வாகத்திற்கு வருமானம் கூடும். பயணிகள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Related Stories: