ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் தனித்தனியாக இருப்பதால் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் ஆதரவு கோரப்படும் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்று சசிகலா கூறினார். இந்நிலையில் ஓரிரு நாட்களில் முக்கிய முடிவை சசிகலா எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. நாளை உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தொடர்பான வழக்கு விசாரணை நடக்க இருக்கிறது.

அதில் எந்த மாதிரிதியான முடிவு வர இருக்கிறது? யாருக்கு இரட்டை இலை செல்ல இருக்கிறது? என்பதை பார்த்த பிறகு சசிகலா, ஓபிஎஸ் சந்திப்பு இருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் சந்திப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: