காப்பரேட் நண்பர்களுக்கு சலுகை வழங்க தாக்கல் செய்யப்பட்ட நண்பர்கள் கால பட்ஜெட் - ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதற்காக தாக்கல் செய்யப்பட்ட நண்பர்கள் கால பட்ஜெட் இது என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார். பட்ஜெட் குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகுல் பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் விலை வாசியை கட்டுப்படுத்துவதற்கும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

42 சதவீதம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்க ஒன்றிய அரசிடம் திட்டங்கள் ஏதும் இல்லை என்பதையே பட்ஜெட் வெளிப்படுத்தி இருப்பதாக ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

ஒன்றிய அரசின் பட்ஜெட் மக்கள் விரோதமானது என்றும் ஏழைகளுக்கு எதிரானது என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். வருமான வரி வரப்புகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் யாருக்கும் உதவாது என்று கூறியிருக்கும் மம்தா வேலையில்லா திண்டாட்டத்திற்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது என்றார். 2024 பொது தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்க பட்டிருக்கும் இந்த பட்ஜெட் ஒரு இருண்ட பட்ஜெட் என்று மம்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: