இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது: அதானி விளக்கம்

மும்பை: இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களை காக்கவே பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டது என அதானி விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது எனவும் அதானி குழுமத்திற்கு அதிக அளவில் கடன் உள்ளது எனவும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றசாட்டையடுத்து அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதானியின் சொத்து மதிப்பும் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 10-வது இடத்தில் இருந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்துக்கு முன்னேறினார். அதானி குழும பங்குகளின் சரிவால் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் மளமளவென சரிந்தது.

இது குறித்து அதானி வீடியோ வழியாக பேசியதாவது, என்னைப்பொறுத்தவரை எனது முதலீட்டாளர்களின் நலன்தான் முதன்மையானது, மற்றவையெல்லாம் 2ம் பட்சம்தான், பங்கு விற்பனை ரத்து முடிவால் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற, இரக்கத்தால் FPOவை தொடர்வது சரியானது அல்ல என முடிவெடுத்துள்ளோம் என அதானி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: