திருமண மண்டபத்தில் நகை திருடிய பெண் கைது

துரைப்பாக்கம்: நீலாங்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 30ம்தேதி வெளிநாடுவாழ் இந்தியர் குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில், 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார். மணமகன் வீட்டார் கேட்டபோது, மணமகளின் உறவினர் என்றும், மணமகள் வீட்டாரிடம், மணமகன் உறவினர் என்றும் கூறி உள்ளார். மணமேடையில் திருமண சடங்கு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது மணமகள் அறைக்கு சென்ற அந்த பெண் இரண்டரை சவரன் நகையை திருடி சென்றுவிட்டார். திருமண நிகழ்ச்சி முடிந்தபின் நகை திருடப்பட்டது பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதை மண்டபத்தில் தெரிவித்தால் உறவினர்கள் மீதே சந்தேகப்படுவதாக கூறி அவர்கள் சங்கடப்படுவர் என பெண்ணின் வீட்டார் யாரிடமும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து, பெண் வீட்டார் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், நகை திருடிய பெண்ணின் புகைப்படம் பதிவாகி இருந்தது.  

போலீசார் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு செல்லும் புரோகிதர்கள் மற்றும் பிற காவல் நிலையத்திற்கு அந்த பெண்ணிண் புகைப்படத்தை அனுப்பி விசாரித்தனர். அதில், கொடுங்கையூரை சேர்ந்த புவனேஷ்வரி (44) என்பது தெரியவந்தது. மேலும்,  போலீசார் நேற்று அவரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: