ரூ.5,000 கோடியில் ஜி-ஸ்கொயர் வீட்டு மனைகள் திட்டம்: ஐதராபாத், மைசூருவிலும் பிளாட்டுகள் அறிமுகம்

சென்னை: வேகமான வளர்ச்சியின் மூலம் தன்னை நிலை நிறுத்தி உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனம் ஐதராபாத், மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனைகள் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜி-ஸ்கொயர் நிறுவனம் தென்னிந்தியாவின் மிகப் பெரிய பிளாட் புரமோட்டராக வளர்ச்சி அடைந்துள்ளது. ஐதராபாத், மைசூரு உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களில் சமீப காலமாக விரிவடைந்து வருகிறது. விரைவில் புனே, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வளமான எதிர்கால சந்தை இருக்கும் நகரங்களில் தனது திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது.

கடந்த 6 மாதங்களில் 600 ஆக இருந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 1,300க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் ரூ.2000 கோடி அளவுக்கு பிளாட்டுகள் விற்பனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.2000 கோடி, கர்நாடகாவில் ரூ.1000 கோடி, ஐதராபாத்தில் ரூ.2500 கோடி என தென்னிந்தியாவில் மட்டும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனைகள் திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் சிஇஓ என்.ஈஸ்வர் கூறுகையில், ``ஜி-ஸ்கொயர் வீட்டு மனை திட்டங்கள் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய உயர் தர மனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையே இலக்காக கொண்டுள்ளது. எங்களது நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் கையகப்படுத்துதலில் உள்ள எண்ணிக்கை ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் முழுமையான வளர்ச்சிப் பாதையையும் அதன் எதிர்கால திட்டங்களையும் காட்டுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா சந்தைகளில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: