யூடியூபராக நடிக்கும் வித்யா பிரதீப்

சென்னை: தமிழில் வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’, ‘சைவம்’, ‘பசங்க 2’, ‘அச்சமின்றி’, ‘களரி’, ‘தடம்’ உள்பட பல படங்களில் நடித்தவர், வித்யா பிரதீப். தற்போது அவர் நடித்து வரும் படம், ‘ஸ்ட்ரைக்கர்’. இதில் அவர் யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக இயங்கும் அவர், ஒரு அமானுஷ்ய சக்தியைப் பற்றிய ஆராய்ச்சியைப் படமாக்கி, அதை தன் யூடியூப்பில் வெளியிடச் செல்கிறார். அப்போது அவர் மிகப்பெரிய பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார். அது என்ன என்பது கதை. இதில் ஹென்றி டேவிட், ஜஸ்டின் விஜய், ராபர்ட், கஸ்தூரி, அபிநயஸ்ரீ நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பிரபு கூறுகையில், ‘கேரம் போர்டின் முக்கிய காயான ஸ்ட்ரைக்கர்தான் மற்ற காய்களை குறிபார்த்து அடித்து வீழ்த்தும். இப்படத்தின் கதையும் அதுபோல் இருக்கும். அமானுஷ்ய சக்தி பற்றிய பாரா-சைக்காலஜி படிக்கும் ஹீரோ ஜஸ்டின் விஜய், அது தொடர்பான செயல்முறையாக, இறந்துபோன ஒருவருடன் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். அதை யூடியூபர் வித்யா பிரதீப் படமாக்க முயற்சிக்கிறார். அப்போது திடீரென்று ஒரு விபரீத நிகழ்ச்சி நடக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கின்றனர் என்பது கதை’ என்றார்.

Related Stories: