ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்..!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்மார்க் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 வெளிநாட்டினர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் மலையடிவாரத்தில் உள்ள 10 வீடுகள் பனியில் புதைந்தன. இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணுவம் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடும் பனிப் பொழிவால் இந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்றடையவே பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.

பெரும் சவாலுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 45 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுவிட்டனர் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. மேலும் காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடைபெறுகிறது.

Related Stories: