2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டமைப்பு உள்ளிட்ட 7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, சுற்றுலாவுக்கான செயல் திட்டம், விஸ்வகர்மா (கைவினைஞர்கள்) மற்றும் பசுமை வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவை இந்த பட்ஜெட்டின் நான்கு முக்கிய புள்ளிகள். தொழில்துறை புரட்சி 4.0 மூலம் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பொருளாதாரத்தை புகுத்த முயற்சித்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனிநபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கதக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நேரடி வரிவிதிப்பு எளிமையாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நேரடி வரிவிதிப்புக்காக கொண்டு வந்த புதிய வரிவிதிப்பு முறை, இப்போது அதிக ஊக்கத்தொகை மற்றும் அதிக ஈர்ப்பைப் பெற்றுள்ளது, இதனால் மக்கள் தயக்கமின்றி பழைய முறையில் இருந்து புதிய முறையை நோக்கி நகர முடியும் என நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.

நாங்கள் யாரையும் புதிய வரிவிதிப்புக்கு கட்டாயப்படுத்தவில்லை, பழைய நிலையில் இருக்க விரும்புபவர்கள் அதனையே தொடரமுடியும். ஆனால் புதிய வரி முறை அதிக தள்ளுபடியை கொண்டு கவர்ச்சிகரமாக உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

Related Stories: