போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணையில் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது, தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு, ஸ்ரீபெரும்புதுாரில் நிலம் கையகப்படுத்தும்போது, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்றுள்ளனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி ஆவணங்களை சமர்ப்பித்து இழப்பீடு பெற்றவர்களிடம் இருந்த்து, அந்த தொகையை வசூலிக்கவும், என சிபிசிஐடி விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். வழக்கின் விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

நெடுஞ்சாலைக்காக பல இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் அப்படி கையகப்படுத்தப்பட்டதில் போலி ஆவணங்கள் பலவற்றைக்கு இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பாக வழக்கு கொடுக்கப்பட்டது, இந்த வழக்கில் நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள். 

Related Stories: