காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கந்தர்வகோட்டை : காட்டுநாவல் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் காட்டு நாவல் ஊராட்சி சேர்ந்த துலுக்கம்பட்டி பகுதிக்கு செல்லும் தார் சாலை மிகவும் பழுது அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

ஜல்லிக்கற்கள் பெயர்து கிடப்பதால் பாதசாரிகளில் கால்களில் குத்துவதகவும், இருசக்கர வாகனங்கள் அதிகபட்சமான டயர் பஞ்சர் ஆவதாகவும் ஆகையால் துலுக்கம்பட்டி தார் சாலையை புதுப்பித்து தரும்படி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் சாலை ஓரங்களில் கருவேல மரங்களும், புல், பூண்டுகளும் இருப்பதால் இவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்லுபவர்கள் முகத்தில் அடிப்பதாகவும் உள்ளது. இதனை மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: