ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும்-சித்தூர் ஆணையாளர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஆணையாளர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

 சித்தூர் அடுத்த தேனபண்டா பகுதியில் உள்ள ஜெகன் அண்ணா காலனியில் வீடுகள் கட்டும் பணியை மாநகராட்சி ஆணையர் அருணா நேற்று அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பேசியதாவது:

இங்கு 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 25 சதவீத பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடியும். அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் ஜெகன் அண்ணா காலனியில் அனைத்து வீடுகளும் கட்டி முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி, சித்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ெஜகன் அண்ணா வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் அனைத்தையும் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. கட்டப்படும் வீடுகளுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். ஆய்வின்போது வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரி தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: