சீனா: சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று மலை மலையாக பணக்கட்டுகளை குவித்து ஊழியர்களுக்கு கோடி கோடியாக போனஸ் வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த கிரேன் தயாரிப்பு நிறுவனம் ஹெனன் மைன் இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட பன்மடங்கு உயர்ந்ததை அடுத்து ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் ரொக்கமாகவே போனஸ் வழங்கும் வகையில் அந்த நிறுவன அலுவலகத்தில் சுமார் 74 கோடி ரூபாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் விற்பனை மேலாளர் மூன்று பேருக்கு தலா 50 மில்லியன் யுவான் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் ரூ.6 கோடி ரொக்கமாகவே வழங்கப்பட்டது. மேலும் வருமானம் உயர காரணமான மேலும் 30 ஊழியர்களுக்கு ரொக்கமாகவே தலா ரூ.1.20 கோடி போனஸ் ஆக வழங்கப்பட்டது. கை நிறைய ரொக்க பணத்தை தூக்க முடியாமல் தூக்கியபடி ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து சென்ற காட்சிகள் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டுவருகிறது. ஹெனன் மைன் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.11,086 கோடி வருவாய் ஈட்டியதை அடுத்து அதில் ஒரு பங்கினை ஊழியர்களுக்கு ரொக்கமாகவே போனஸ் ஆக வழங்கி ஆனந்த அதிர்ச்சி வழங்கி இருக்கிறது.