குறிஞ்சிப்பாடி பகுதியில் மணிலாவில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

வடலூர் : குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மணிலா சாகுபடியில் ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். குறிஞ்சிப்பாடி, கல்குணம், குள்ளஞ்சாவடி, பெத்தநாயக்கன்குப்பம், தம்பி பேட்டை, அகரம் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது விளைநிலங்களில் மணிலா சாகுபடி செய்து வருகின்றனர். இதில் ஊடுபயிராக லாபம் தரக்கூடிய பயிர்களில் ஒன்றான உளுந்து பயிர்கள் விதைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிர்கள் தற்போது பசுமையாக வளர்ந்து காணப்படுகின்றது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, விளைநிலங்களில் தற்போது மணிலா சாகுபடி செய்து உள்ளோம். அதில் ஊடு பயிராக உளுந்து விதைத்துள்ளோம். அது மட்டுமின்றி உளுந்துக்கு என்று தனியாக நீர் பாய்ச்சுவது இல்லை. மணிலாவிற்கு நீர் பாய்ச்சும்போது உளுந்துக்கும் நீர் பாய்கின்றது. இதனால் செலவு மற்றும் நேரம் விரயமாகுவது குறைகிறது. ஆகவே பெரும்பாலான விவசாயிகள் உளுந்தை ஊடுபயிராக பயிரிட்டு வருகின்றனர் என்று கூறினர்.

Related Stories: