காரைக்காலில் தைப் பூசம் தினத்தன்று அசைவ உணவகங்களை மூட வேண்டும்-கலெக்டரிடம் விஷ்வ இந்து பரிஷத் மனு

காரைக்கால் : காரைக்காலில் தை பூசம் தினத்தன்று அசைவ உணவகங்களை மூட வேண்டும் என்று கலெக்டரிடம் விஷ்வ இந்து பரிஷத் மனு அளித்துள்ளது.காரைக்கால் மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட வெங்கடாசலம் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அளித்த கோரிக்கை மனுவில் கூறிருப்பதாவது:பொதுமக்களிடம் ஜீவ காருண்யம் உரைத்த வடலூர் அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்த தைப் பூச தினத்தன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இறைச்சி கடைகள் இயங்க அரசுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக காரைக்காலிலும் தைப் பூசத் தினத்தன்று இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அசைவ உணவகங்கள் இயங்குகின்றன.

அசைவ உணவை விற்பதால் தான் அவை, அசைவ உணவகங்கள் ஆகின்றன. அப்படிப்பட்ட கடைகளுக்கு மாமிச விற்பனைக்கு தடை செய்யப்பட்ட அந்த நாளில் மாமிசம் கிடைக்க வாய்ப்பில்லை.

அப்படியிருந்தும் அந்த அசைவ உணவகங்கள் இயங்குமேயானால் அந்த கடைகளுக்கு, ஒன்று ப்ரீசரில் வைக்கப்பட்ட பழைய இறைச்சி அல்லது சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் இறைச்சிக் கடைகள் மூலமாக கிடைக்கும் இறைச்சியால் உணவு தயாரிக்கப்பட்டிருக்கும். இவை இரண்டுமே தவறானதாகும். எனவே தைப் பூசத்தன்று அசைவ உணவகங்களையும் மூட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: