அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் கோடி என்பது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகும். அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் தரும் திட்டம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: