நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும்: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தகவல்

டெல்லி: நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நிதியாண்டிற்கான ரியல் ஜிடிபி 6.5%, நாமினல் ஜி.டி.பி 11% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து இருக்கும்.

ரஷ்யா உக்ரைன் மோதல் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் 2019ல் 8.3 %, 2022 செப்டம்பர் மாதத்தில் 7.2%ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

2023ம் ஆண்டின் வளர்ச்சி, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல், முதலீடுகள் கடன், ஏற்றுமதி, இறக்குமதி வருவாய் போன்றவை தொடர்பான விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும். இந்த ஆய்வறிக்கை நிதி துறையின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவு சார்பாக உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: