ரூ.7,986 கோடி வரி செலுத்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: ரூ.7,986 கோடி வரி செலுத்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸுக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிப்புக் கூட்டு செலுத்தியதற்கு வருமானவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என டாஸ்மாக் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.7,986 கோடி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த மனு எற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

2016-17ல் மாநில அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மதிப்புக் கூட்டு வரியாக செலுத்திய ரூ.14,000 கோடி வரி விதிப்புக்கு உட்பட்டது. மாநில அரசு நிறுவனங்களின் சட்டப்படி வருமானவரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை தரப்பு வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு 2 வார காலத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு குறித்து வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Related Stories: