களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள் தான் வெல்வோம்: லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் , திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதே போல, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.  

இந்நிலையில், இன்று தமிழக தேர்தல் ஆணையரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது; இடைத்தேர்தல் நியாயமாகவும், அமைதியாகவும், அதிகார துஷ்பிரயோகம் கட்டவிழ்த்து விடும் நிலையை தவிர்த்து சுதந்திரமாக தேர்தலை நடத்த வேண்டும். 7ம் தேதி வரை காலம் உள்ளது, வேட்பாளர் யார் என்பதை சொல்வோம், களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள் தான் வெல்வோம். லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்.  2024 நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 அதிமுக வெல்லும். வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: