திருகோணமலைக்கு 340 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்: வானிலை மையம் தகவல்

சென்னை: திருகோணமலைக்கு 340 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் மாலை வரை மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை இலங்கை கடற்கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மீண்டும் 11 கி.மீ.-ல் இருந்து 13 கி.மீ.-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: