கருணை கொலை செய்யுங்கள் சூளகிரியில் பரபரப்பு பேனர்-செல்போன் டவர் மீது ஏறிய விவசாயி கைது

சூளகிரி : சூளகிரி அருகே உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 26வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இழப்பீடு தொகை வழங்குவதற்கு பதிலாக, எங்களை கருணை கொலை செய்யுங்கள் என அரசுக்கு கோரிக்கை விடுத்து பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் நாகமங்கலம் ஊராட்சிகளில் 6வது சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து, விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகள், விவசாய நிலங்களில் கருப்பு கொடி பறக்க விட்டுள்ளனர். 26வது நாளாக நேற்றும் உத்தனப்பள்ளி ஆர்.ஐ., அலுவலகம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அப்போது, உத்தனப்பள்ளி ஊராட்சி குகனூர், லாலிக்கல் பகுதி விவசாயிகள் சிலர், சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் நிலத்தில் பேனர் வைத்தனர். அதில், ‘‘எங்களுக்கு இழப்பீடு வேண்டாம். அதற்கு மாற்றாக எங்களை கருணை கொலை செய்யுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்த. இதனால், அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: