வேதாரண்யத்தில் மழையால் சம்பா அறுவடை பணி பாதிப்பு

வேதாரண்யம் : நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வேதாரண்யம் மற்றும் அகஸ்தியன்பள்ளி, வாய்மேடு, ஆயக்காரன்புலம், கரியாபட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது.

தற்போது, சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த திடீர் மழையால் விவசாயிகள் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியமால் அவதிப்படுகின்றனர்.

மேலும் சென்ற வாரம் வேதாரண்யம் பகுதியில் சம்பா அறுவடை பணி துவங்கி முழு வீச்சில் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் அறுவடை பணிகளும் பாதித்தது. மேலும் அறுவடை செய்த நெல்லைகாய வைக்க முடியாமலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மேகமூட்டமாகவும் குளிர்ந்த காற்றும் காணப்படுகிறது. நன்றாக விளைந்த நெற்கதிர்கள் இந்த மழையால் முற்றிலும் சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த பொருளாதார இழப்பும் மனவேதனையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: