அந்தியூர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு 50 ஆண்டு வாழும் மிக அரிதாக தென்படும் மலை இருவாச்சி

*ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்த பஞ்சுருட்டான்

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறை சார்பில் நேற்று முன்தினம் ஒருநாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இதில் மொத்தம் 50 நீர்நிலைப் பறவை இனங்களும், 36 பொதுப் பறவைகள் இனங்கள் என மொத்தம் 86 பறவை இனங்கள் கணக்கெடுக்கும் பணியில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலசை வரும் பூச்சிகளை உண்ணும் பறவை இனமான பஞ்சுருட்டான் (ஈரோப்பியன் பீ ஈட்டர்) பறவை தென்பட்டது.

அதேபோல் இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த மிக அரிதாக தென்படும் மலை இருவாச்சி பறவை நேற்று முன்தினம் அந்தியூர் வனப்பகுதியில் தென்பட்டுள்ளது. இப்பறவை ஏறக்குறைய 50 ஆண்டுகாலம் வாழும், உருவ அமைப்பில் பெரிதாக இருக்கும். இப்பறவை நீளமான வளைந்த அலகை கொண்டுள்ளது. அலகுக்கு மேல் கொம்பு போன்ற அமைப்பு உள்ளது.

இது மட்டும் இன்றி இமயமலை பகுதியில் இருக்கும் நீலமேனி  ஈ பிடிப்பான் (வெர்டிட்டர் பிளை கேட்ச்சர்), பாம்புண்ணி கழுகு, தடித்த அலகு மீன்கொத்தி, வானம்பாடி, ஊசிவாள் வாத்து, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து, குக்ருவாள், செந்நீல கொக்கு, மரகத புறா உள்ளிட்ட பறவைகளும் தென்பட்டன.கடந்த காலம் முதல் இதுவரையிலும் மொத்தம் 166 பறவை இனங்கள் அந்தியூர் வனப்பகுதியில் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: