டெக்ஸ்வேலியில் தென்னிந்திய அளவிலான ஜவுளி கண்காட்சி: ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாடல்கள் ஒய்யார நடைபோட்டதை கண்டுரசித்த பொதுமக்கள்

ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து மாடல்கள் ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி ஜவுளி மையத்தில் தென்னிந்திய அளவிலான ஜவுளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை முன்னிட்டு கண்கவர் ஆடை அலங்காரம் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பெங்களூருவில் இருந்து வந்திருந்த மாடல்கள் புதிய ரக ஆடைகளை அணிந்து மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர். ஜவுளி உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கான இந்த கண்காட்சியில் புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  

Related Stories: