கார் கண்ணாடி உடைத்ததாக வெளியான சிசிடிவி காட்சி பொய்யானது: நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: கார் கண்ணாடி உடைத்ததாக வெளியான சிசிடிவி காட்சிகள் பொய்யானது என்றும், அதை வைத்து தன் மீது புகார் அளித்த குடும்பத்தினர் பணம் கேட்டு மிரட்டினர். அதற்கு நான் பணம் கொடுக்காததால் என் மீது பொய் புகார் அளித்துள்ளதாக நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கொளத்தூர் சாஸ்திரி நகரை சேர்ந்த நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா நேற்று பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதை தொடர்ந்து நித்யா நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக எதிர் வீட்டில் வசிக்கும் மணி என்பவருடன் கார் நிறுத்துவதில் தகராறு உள்ளது. இதனால் தன்னையும் தனது குழந்தையும் இழிவான வார்த்தைகளால் மணி குடும்பத்தினர் பேசி வருகின்றனர். மணியின் காரை நான் கற்களால் சேதப்படுத்தியதாக வந்த சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டவை. நான் சம்பவத்தன்று ‘துணிவு’ படத்தை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு செல்லும் போது, அங்கு சாவி கீழே விழுந்துவிட்டது. அதை தேடி நான் சென்றேன்.

மற்றப்படி எனக்கும் கார் சேதப்படுத்தியதற்கும் எந்த தொடர்பும் இல்லை. புனையப்பட்ட சிசிடிவி காட்சியை காண்பித்து மணி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னிடம் அதிகப்படியான பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். பணம் தர மறுத்ததால், தனது பெயரை களங்கப்படுத்த அவர்கள் காவல் நியைத்தில் என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: