அமெரிக்க நடிகை புற்றுநோயால் மரணம்

நியூயார்க்: அமெரிக்க தொலைகாட்சி தொடர் நடிகை அன்னி வெர்ஷிங் (45), கடந்த 2009ல் வெளியான தொலைகாட்சி தொடரில் ரெனி வாக்கராக நடித்து மிகவும் புகழ்பெற்றவர். அத்துடன் போஷ் மற்றும் டைம்லெஸ் போன்ற தொடர்களிலும் நடித்தவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அன்னி வெர்ஷிங், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலை அவரது கணவரும், சக நடிகருமான ஸ்டீபன் ஃபுல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எங்களது குடும்பத்தின் ஆன்மா எங்களை விட்டு பிரிந்தது’ என்று தெரிவித்துள்ளார். மறைந்த நடிகை அன்னி வெர்ஷிங், கடந்த 20 ஆண்டுகளாக பல தொடர்களில் நடித்து சாதித்ததால், அவரது மறைவு அமெரிக்க மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நடிகை மறைவு: இங்கிலாந்து நடிகை சில்வியா சிம்ஸ் (89), டீனேஜ் பேட் கேர்ள், ஐஸ் கோல்ட் இன் அலெக்ஸ் படங்களில் நடித்தார். வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் லண்டனில் நேற்றுமுன்தினம் இரவு மரணமடைந்தார்.

Related Stories: