பொறுத்து இருந்து பாருங்கள் - செங்கோட்டையன்; பொறுமைக்கும் எல்லை உண்டு - தொண்டர்கள்

ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி நடத்திய  பெருமை எடப்பாடிக்கு உண்டு. அவரது தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதன் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறோம். கொங்கு மண்டலம் அதிமுகவின் இரும்பு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. பல தேர்தல்களில் களம் கண்டவர்கள் இங்கு தேர்தல் பணியாற்ற வந்துள்ளனர். இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை பொறுத்த வரை, கோர்ட்டில் என்னென்ன ஆவணங்கள் தேவையோ அதை வழங்கி உள்ளோம். அதிமுக 4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதற வாய்ப்பு இல்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 7ம் தேதிதான். வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். இவ்வாறு கூறினார். தனித்து போட்டி, பாஜவுடன் கூட்டணி, வேட்பாளர் யார்? போன்ற கேள்விகளுக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று செங்கோட்டையன் பதிலளித்தார். அருகில் நின்றிருந்த தொண்டர்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு தலைவரே, தேர்தல் முடிந்துவிடப்போகுது என்றபடி சென்றனர்.

Related Stories: