தடுமாறும் முரசு வேட்பாளர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டுமே இத்தொகுதியில் ஜொலிக்கிறார். மீதமுள்ள வேட்பாளர்கள் களத்தில் காணவில்லை. அதிமுகவில் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரு அணிகளிலும் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நானும் களத்தில் இருக்கிறேன்... என காட்டிக்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், ஜொலிக்கவில்லை. குறிப்பாக, கோவை, திருப்பூரில் இருந்து கட்சி நிர்வாகிகள் பலரை பிரசாரத்துக்கு அழைத்துள்ளார். ஆனால், யாருமே வரவில்லை. ஏன்? என கேட்டபோது, நாங்கள் ஏற்கனவே நொந்து நூலாகி கிடக்கிறோம்.... இதில் இவருக்கு வேற பணம் செலவு செய்யணுமா... என்கின்றனர். போகிற போக்கை பார்த்தால், டெபாசிட் கிடைக்குமான்னு... தெரியலையே என அந்த கட்சியினரே கமண்ட் அடிக்கிறார்களாம்.

Related Stories: