‘இது பாஜவுக்கான தேர்தல் அல்ல’ பிபிசி ஆவணப்படம் பொய்யான செய்தி: அண்ணாமலை

கோவை ஈச்சனாரியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஸ்ட்ராங்கான வேட்பாளர் நிற்க வேண்டும். பாஜவிற்கான தேர்தல் இது அல்ல. எங்களுக்கான தேர்தல் 2024தான். பிபிசி ஆவணப்படம் யார் வேண்டுமானாலும் போடட்டும். அது பொய் செய்தி. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முழுக்க பொய் என தெரிவித்துள்ளனர். வேலையில்லாத நான்கு பேர் ஸ்கிரீனை போட்டு மக்களுக்கு காட்டுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்த பின்பு மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். குறை சொன்னவர்கள் எல்லாம் ஜெயிலில் உள்ளனர். தயவு செய்து திரையிடுங்கள். தியேட்டரில் போடுங்கள். இது பிரபகண்டா மெட்டீரியல். பிபிசி இந்திய திருநாட்டை களங்கப்படுத்துகிறது. பார்க்க மக்கள் இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியும்.

இன்னும் 10 ஆண்டில் வட மாநிலத்தவர்கள் வேலைக்காக தமிழகம் வர மாட்டார்கள். பெங்களூரில் வெளியே போங்கள் என்று சொன்னால் நம்ம மக்கள் எங்கு போவார்கள்?. இன்னும் 10 வருடத்தில் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆள் கிடைக்காது. ராஜ்பவனில் முதல்வரும், ஆளுநரும் ஒன்றாக கம்பீரமாக நடந்து வந்தார்கள். முதல்வர் எங்கள் முதலமைச்சர், தமிழ்நாட்டு முதலமைச்சர். கவர்னரும் முதல்வரும் சுமூகமாக இருக்கிறார்கள். விமர்சனம் செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. தொண்டர்கள் ஆபாசமாக பேசக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளேன். நான் கமெண்டுக்கு பதில் சொன்னால் முழு நாளும் பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: