பூத் சிலிப்பை மட்டும் வைத்து ஓட்டு போட அனுமதிக்காதீங்க... அதிமுக எடப்பாடி அணி திடீர் மனு

அதிமுக எடப்பாடி அணி வழக்கறிஞர் பிரிவின் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி.யுமான செல்வக்குமார சின்னையன், பகுதி செயலாளர் மனோகரன் தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமாரிடம் மனு அளித்தனர். அதில், இடைத்தேர்தலை நேர்மையாக நடத்திட, அனைத்து வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கும் வாக்காளர்கள் கொண்டு வரும் பூத் சிலிப்புடன், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பூத் சிலிப் மட்டுமே கொண்டு வந்தால் எக்காரணம் கொண்டும் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. பூத் சிலிப்பை வாக்களிக்கும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பே, அதாவது பிப்.12லிருந்து வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட அரசு அலுவலர் மூலம் பூத் சிலிப்பை வீடு வீடாக வழங்க வேண்டும். மற்ற தனி நபரிடமோ, அல்லது கட்சியை சார்ந்த நபரிடமோ வழங்க கூடாது. என கூறியுள்ளனர்.

Related Stories: