தாய்க்கு பேய் விரட்டுவதாக கூறி 8ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: மந்திரவாதி கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி மேலகலுங்கடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). மாந்தீரிகம், பரிகார பூஜைகளை செய்து வந்துள்ளார். நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு பூஜைக்கு செல்லும்போது 55 வயது தொழிலாளி ஒருவர், மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என கூறி உள்ளார். அப்போது மணிகண்டன், உங்கள் மனைவிக்கு பேய் பிடித்துள்ளது. நான் சரி செய்கிறேன் என கூறி அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில், அந்த தொழிலாளியின் மூத்த மகளான 8ம் வகுப்பு மாணவி வயிறு வலிப்பதாக கூறவே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் மாணவி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. விசாரித்த போது, மணிகண்டன் பிஸ்கட், சாக்லெட் வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்ததாகவும், தாய் குணமாக வேண்டுமென்றால் நான் சொல்கிறபடி கேட்க வேண்டும். வேறு யாரிடமும் கூறினால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் என மாணவி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, மந்திரவாதி மணிகண்டனை கைது செய்தனர்.

Related Stories: