வீட்டில் பாலியல் தொழில் அதிமுக மாவட்ட மகளிரணி நிர்வாகி கணவருடன் கைது

விருதுநகர்: விருதுநகர், கருப்பசாமி நகர் ஐடிபிடி காலனியில், உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து சிலர் பாலியல் தொழில் செய்து வருவதாக, விருதுநகர் ரூரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ரூரல் போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வீட்டிலிருந்த சாத்தூர் மேட்டமலையைச் சேர்ந்த 29 வயது பெண் உட்பட சிலர் பிடிபட்டனர். போலீசார் விசாரணையில், விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த அதிமுக மகளிரணி மேற்கு மாவட்ட துணைத்தலைவி அமல்ராணி (40), அவரது கணவர் சந்திரசேகரன் (42) ஆகியோர், கருப்பசாமி நகர் ஐடிபிடி காலனியில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக தெரிய வந்தது. இதையடுத்து சந்திரசேகரன், அமல்ராணி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதிமுக மகளிரணி நிர்வாகி வாடகைக்கு வீடு பிடித்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: