ஒடிசா அமைச்சர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை பாஜ வலியுறுத்தல்: முதல்வர் பதவி விலக காங். கோரிக்கை

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஜர்சுகுதா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாசை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி எஸ்ஐ. கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டு கொன்றார் அவரது மறைவைத் தொடர்ந்து, ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், கட்சியினர் உள்ளிட்டோர் நேற்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, நிதி மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் நிரஞ்சன் புஜாரிக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜ.வை சேர்ந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஜெயநாராயணன் மிஸ்ரா கூறுகையில்,’ அமைச்சர் கொலையில் உண்மையான பின்னணியை அறிய விரும்பினால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் உத்தரவிட வேண்டும்,’’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ. சந்தோஷ் சிங் சலூஜா கூறிய போது, ``ஒரு அமைச்சர் பட்டப் பகலில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  மாநிலத்தின் இந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும்,’’ என்று வலியுறுத்தினார்.

Related Stories: