டெல்லியில் மேலும் ஒரு முகல் தோட்டம் பெயர் மாற்றம்

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு முகல் தோட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயர் அமிர்த தோட்டம் என்று சமீபத்தில் மாற்றப்பட்டது. தற்போது டெல்லி பல்கலையில் உள்ள முகல் தோட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள முகலாயத் தோட்டம் ‘கவுதம் புத்தர் நூற்றாண்டு தோட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த பெயர் மாற்றம் தற்செயலான விஷயம் என்றும், அதன் தோட்டத்துறை கமிட்டியுடன் நீண்ட விவாதத்திற்குப் பிறகு பல்கலைக்கழகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Stories: