மருந்தாகும் துவரம்பருப்பு

நன்றி குங்குமம் தோழி

புரதச்சத்து மிகுந்த துவரம்பருப்பு

உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது நாம் அறிந்ததே. அதோடு தோல், தலைமுடி, பாதம் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

*துவரம் பருப்பு 200 கிராம், மஞ்சள் 10 கிராம் சேர்த்து மாவாக அரைத்து வாரம் ஒரு முறை முகத்தில் தேய்த்துக் குளித்தால் கரும்புள்ளி, தேமல் ஆகியன மறைந்து விடும்.

*சிலருக்கு பூனை முடி தோன்றி மீசை முளைத்தது போலிருக்கும். இதற்கு துவரம் பருப்பு 1½ கிேலா, கோரைக் கிழங்கு ¼ கிலோ, கல்கண்டு 100 கிராம் சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் மீண்டும் முடி முளைக்காது. முளைத்த முடியும் உதிரும். நல்ல பலன் கிட்டும்.

*துவரம்பருப்பு 2 கிண்ணம், வெந்தயம் 1 கிண்ணம், தயிர் 1 டீஸ்பூன், பூந்திக் கொட்டை 2 சேர்த்து இரவு ஊற வைத்து காலையில் அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து பின் தலையை நன்றாக அலசி குளித்தால் கூந்தல் பளபளக்கும். முடி வெடிப்பும் நீங்கும்.

*துவரம்பருப்பு 1 டீஸ்பூன், மருதாணி இலை சிறிது, இரண்டையும் அரைத்து தயிரில் கலந்து பாதத்தில் பற்று மாதிரி போட்டுக் காய்ந்ததும் அலம்பினால் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு குணமாகும்.

*சீயக்காய் 1 கிலோ, சுட்டு கறுப்பாக்கிய வசம்பு 10, துவரம் பருப்பு கால் கிலோ. வேப்பங்கொட்டை 20 கிராம். உலர்ந்த நெல்லிக்காய் 100 கிராம், வெந்தயம் கால் கிலோ. இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெயில் 2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி, தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறகு இந்த பவுடரை சுடுதண்ணீரில் கலந்து, தலையில் “பேக்” போட்டு அரை மணி நேரம் விட்டு, அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த சிகிச்சையை செய்தால், பேன், பொடுகு, ஈறு பக்கத்திலேயே நெருங்காது. முடியும் மிருதுவாக இருக்கும்.

- அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

Related Stories: