விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென பெய்த மழையால் 20,000 நெல் மூட்டை மழையில் நனைந்து நாசம்: விவசாயிகள் கவலை..!!

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீரென பெய்த மழையால் 20,000 நெல் மூட்டை மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கம்மாபரம், கார்மாங்குடி, ஆதனூர்,  உள்ளிட்ட 100க்கும்  மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடை செய்து விற்பனைக்காக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த வியாழன் நெல் மூட்டைகளை கொண்டுவந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அரசு விடுமுறை என்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரிகள் விலை போடாததால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வளாகத்தின் வெளியே அடுக்கி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று காலை திடீரென்று சாரல் மழை பெய்ததால் அவர்கள் கொண்டுவந்த 20,000க்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது. பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்த தார்பாய்கள் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது. வியாபாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அவர்களின் குடோனில் அடுக்கிவைத்தது தான் இதற்கு முதல் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். 

Related Stories: