சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-டிரைவர் கைது

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, சரக்கு ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 300கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வழியாக கேளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரிப்பதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம், குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை(புட்செல் ) இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், எஸ்ஐ கலைசெல்வன் மற்றும் போலீசார், ஆனைமலை மற்றும் அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இதில், நஞ்சேகவுண்டன்புதூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகம் படும்படியாக வந்த கேரள பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், மூட்டைகள் அடுக்கி வைத்திருந்ததை பார்த்தனர்.

அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, ஒவ்வொரு மூட்டையிலும் தலா 50கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 6மூட்டைகளில் 300கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பல்வேறு இடங்களில் சேகரித்து கேரளாவுக்கு கடத்த முயன்ற கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த டிரைவர் வேலுச்சாமி(62) என்பவரையும் கைது செய்தனர்.

Related Stories: