பெரியகுளம் பகுதியில் முதல் போக நெல் சாகுபடி பணி தீவிரம்

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியை சுற்றி 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோவை 43 மற்றும் 45, ஆடுதுறை 39, 45 உள்ளிட்ட ரக நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தனர். பருவமழை தொடர்ந்து பெய்ததால் பெரியகுளம், ஆண்டிகுளம், பூலாங்குளம் உள்ளிட்ட குளங்களின் மூலம் பாசன வசதி பெறும் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதில், நல்ல விளைச்சல் அடைந்ததால் விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளில் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தொடர்ந்து பெய்த பருவமழையால் இந்தாண்டு முதல் போக சாகுபடியில் ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் பகுதியில் அறுவடை பணிகள் துவங்கி உள்ளதால் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உரிய நேரத்தில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: