×

க்ரீன் டீ எல்லோருக்குமானதல்ல...

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் க்ரீன் டீ எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் சரியான அல்லது தனது உடல் எடையின் அளவிலிருந்து 5 அல்லது 10 கிலோ அதிகம் உள்ளவர்கள் கூட இந்த க்ரீன் டீயை அருந்தக் கூடாது. அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே இதை எடுத்துக் கொள்வது அவசியம்.

உடல் மெலிந்தவர்கள் அல்லது சரியான உடல் எடையில் உள்ளவர்கள் உடலில் தேவையற்ற கொழுப்பானது இருக்காது. ஆனால் இதை அறியாமல் க்ரீன் டீயை தொடர்ந்து அருந்தும்போது உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களை மொத்தமாக வெளியேற்றிவிடும். உடலில் கால்சியம் போன்ற சத்துகள் உறிஞ்சப்பட்டு எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்கும்.

எனவே, அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற வரைமுறை உண்டு. அதேபோல் நீரிழிவுடன் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உட்பட அனைவருமே மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே க்ரீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் அல்லாதவர்கள் தினமும் காலையில் சூடான தண்ணீரில் 5 அல்லது 6 சொட்டு எலுமிச்சை சாறும், 1 டீஸ்பூன் தேனும் கலந்து குடித்து வர வயிறு சுத்தமாகும். இதற்கு வரைமுறை இல்லை. யார் வேண்டுமானாலும் அருந்தலாம்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!