கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

கோபி : கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கொடிவேரி அணைப்பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் விரட்டிச்சென்று  பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அளுக்குளி அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்த நாகரத்தினம் (23), சிங்கிரிபாளையத்தை சேர்ந்த தீனதயாளன் (28), அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்கிற ஜீவானந்தம் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மேலும் விசாரணையில், ஊட்டி பேருந்து நிலையத்தில் கஞ்சா வாங்கி வந்து  இங்கு விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: