சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரியும் யானைகள் கூட்டம்: அடர்ந்த வனத்துக்குள் யானைகளை விரட்ட விவசாயிகள் கோரிக்கை..!!

சத்தியமங்கலம்: கர்நாடக வனப்பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடியில் படையெடுத்துல யானை கூட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 10 கும் மேற்பட்ட வனசரகம்களில்  யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் காணப்படுகின்றன. உணவு தேடி அவ்வப்போது விளைநிலங்களில் புகும் யானைகள் பயிர்களை துவம்சம் செய்வது தொடர்கதையாகிவருகிறது.

இந்நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20க்கும் அதிகமான யானைகள் நேற்று மாலை தமிழக வனப்பகுதியான ஜீரஅள்ளி வனசரகத்திற்கு உள்ளிட்ட அருள்வாடி கிராமத்தில் சுற்றி திரிந்தன. யானை கூட்டத்தை அடர்ந்த காட்டுக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விலை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: