10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம்

சென்னை: 10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறவிருந்த செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கும் செய்முறை தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே நடத்த திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது.

2022-23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 10,11,12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை முன்கூட்டியே நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வுக்கும் செய்முறை தேர்வுக்கும் நாட்கள் குறைவாக உள்ளதால் முன்கூட்டியே நடத்த திட்டம் என தகவல் தெரிவித்துள்ளது. செய்முறை தேர்விற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Related Stories: