மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திடவேண்டும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 87.44% பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். நேற்று மாலை வரை 2.34 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க இன்று(டிசம்பர் 31) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திடவேண்டும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுடன் 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி, விசைத்தறி தொழிளார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மானியங்களைப் பெற ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 87.44% பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். நேற்று மாலை வரை 2.34 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் மின் இணைப்புடன் ஆதாரை இதுவரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திடவேண்டும் என  அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: