இந்தி பாடலை ஏழை பெண் பாடும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்: சினிமாவில் பாட வாய்ப்பு வாங்கித்தருவதாக சோனு சூட் வாக்குறுதி

மும்பை: ஏழை பெண் ஒருவர் இந்தி பாடல் ஒன்றை மிக அழகாக படுவதை டுவீட்டரில் பதிவிட்டுள்ள ஹிந்தி நடிகர் சோனு சூட் அவரது செல்போன் எண்ணை பதிவிடுமாறு கேட்டுள்ளார். முகேஷ்குமார் சின்ஹா என்பவர் பதிவிட்டுள்ள டுவீட்டரை தமது பக்கத்தில் இணைத்து வெளியிட்ட சோனு சூட் அந்த பெண்ணுக்கு சினிமாவில் பாட வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் சமையலறையில் இருந்து சினிமா பாடல் ஒன்றை அந்த பெண் பாடுவது பதிவாகியுள்ளது. வீடியோவில் சப்பாத்தி தயார் செய்யும் தாயிடம் அவரது மகள் குறிப்பிட்ட பாடலை படுமாறு கேட்கிறார். அதற்கு அந்த பெண் தான் அந்த பாடலை பாடி நீண்ட காலம் ஆகிவிட்டதால் தமக்கு நியாபகம் இல்லை என்று கூறுகிறார். ஆனால் மகள் மீண்டும் கேட்டதால் கடைசியாக பாடுவதாக கூறி படும் போது இனிமையான குரல் வெளிப்படுகிறது.

Related Stories: