ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி!: சீட்டுக்கட்டுகளை போல் சரியும் சாம்ராஜ்யம்..அதானி குழும நிறுவன பங்குகள் விலை 3வது நாளாக சரிவு..!!

டெல்லி: அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் விலை 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்ததை அடுத்து 3வது நாளாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர். உலகின் 3வது மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர். ஆசியாவின் பெரும் பணக்காரர் என தொழிற்துறையில் கொடிகட்டி பறக்கும் குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் கோட்டையை ஹிண்டன்பர்க் ரிசர்ஜ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை அதிரவைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவன ஆய்வறிக்கை முன்வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டு கட்டுகளை போல மளமளவென சரிய தொடங்கியிருக்கிறது. இரண்டே நாட்களில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை அதானி குழுமம் சந்தித்துள்ளது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தேசிய அரசியல் அரங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் விலை 3வது நாளாக கடும் சரிவை சந்தித்துள்ளன.

அதன்படி அதானி டோட்டல் கேஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களின் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.402.80 காசுகள் சரிந்து ரூ.1,611.40ஆக வர்த்தகமாகி வருகிறது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை ரூ.586.90 சரிந்து ரூ.2,347.65ஆக வர்த்தகமாகி வருகிறது. அதானி எனர்ஜி பங்கு விலை ரூ.270 குறைந்து ரூ.1215ஆக வீழ்ச்சியடைந்துள்ளது; பங்கு விலை 17.4 சதவீதம் சரிந்துள்ளது. அதானி வில்மர் பங்கு விலை ரூ.25.85 குறைந்து ரூ.491.45ஆக உள்ளது. அதானி போர்ட் நிறுவன பங்கு விலை ரூ.6.55 குறைந்து ரூ.592.05ஆக உள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை ரூ.12.40 குறைந்து ரூ.235.65ஆக உள்ளது.

Related Stories: