சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உயிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள பழைய கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜேசிபி இயந்திரம்மூலம் சுவர் இடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் போது இடிபாடுகளில் பெண் உட்பட சிலர் இடிபாடுகளில் சிக்கினர். கட்டிடம் இடிக்கும் பணியின்போது சுவர் மேலே விழுந்ததில் வங்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

இந்நிலையில் கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் ஏற்கனவே ஜேசிபி உரிமையாளர் ஞானசேகரன், ஓட்டுனர் பாலாஜி ஆகியோரை போலீஸ் கைது செய்தது. வழக்கில் தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸ் கைது செய்தது. கடந்த வெள்ளிக்கிழமை கட்டிடம் இடிக்கும் பணியின்போது சுவர் மேலே விழுந்ததில் வங்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்.

Related Stories: