போர் விமானங்கள் நடுவானில் மோதல்கருப்பு பெட்டி மீட்பு

மொரேனா: மபியில் விபத்துக்கு உள்ளான போர் விமானங்களில் இருந்து கருப்பு பெட்டி, விமான தரவு கருவியின் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளது. மபி மாநிலத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமான படை விமானங்கள் நொறுங்கி விழுந்தன. இதில், மிராஜ் விமான பைலட் அனுமந்தராவ் சாரதி பலியானார். சுகோய் விமானத்தின் 2 பைலட்களும் காயங்களுடன் தப்பினர்.

2 விமானங்களும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்தனர்.ஆனால்,  விபத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மொரேனா மாவட்ட கலெக்டர் கூறுகையில், மிராஜ் விமானத்தின் கருப்பு பெட்டியும், சுகோய் விமானத்தில் இருந்த விமான தரவு கருவியின்(பிளைட் டேட்டா ரிகார்டர்) ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது. அதன், இன்னொரு பகுதி ராஜஸ்தானில் விழுந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதை தேடும் பணி நடக்கிறது’’ என்றார்.

Related Stories: