வருமானத்தை விட 100 மடங்கு அதிக சொத்து குவித்த சிறை அதிகாரி : போலீஸ் சோதனையில் கட்டுக் கட்டாக பணம், நகை சிக்கியது

குவாலியர்:மத்திய பிரதேசத்தில் வருமானத்தைவிட 100 மடங்கு அதிக சொத்து குவித்த சிறை அதிகாரி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.12.5 லட்சம் பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள் சிக்கின. மபி மாநிலம் மொரேனா மாவட்ட சிறையில் உதவி சிறை அதிகாரி ஹரிஓம் பராசார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வைத்துள்ளதாக பல புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்சஒழிப்பு துறை போலீசார் ஹரிஓமுக்கு சொந்தமான வீடுகளில் லஞ்சஒழிப்பு துறை போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில்,ரூ.12.5லட்சம் பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகள், நிலத்திற்கான ஆவணங்கள் சிக்கின. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராகவேந்திரா ரிஷிஸ்வர் கூறுகையில்,‘‘ சிறை அதிகாரியின் பணம், நகைகள் மற்றும் சொத்துகள் அவரது உண்மையான வருமானத்தை விட 100 சதவீதம் அதிகம் ஆகும். விரைவில் அவரது வங்கி லாக்கர்கள் திறந்து ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: