பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் ஏசியா விமானம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் இருந்து கொல்கத்தா சென்ற ஏர்ஏசியா விமானம் பறவை மோதியதால் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. “உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11 மணிக்கு  ஏர்ஏசியாவுக்கு சொந்தமான விமானம் 180 பயணிகளுடன் கொல்கத்தா புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன்மீது ஒரு பறவை மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த விமானம் அவசர, அவசரமாக மீண்டும் லக்னோ விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வௌியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று விமான நிலைய செய்தி தொடர்பாளர் ரூபேஷ் குமார் தெரிவித்தார்.

Related Stories: